ஆபரணங்களின் பயன்பாட்டில் வைரத்திற்கு அடுத்ததாக அதிக விலையுயர்ந்த ரத்தினமாக மரகதம் உள்ளதோடு, அதிக்ஷ்டக்கல்லாகவும் இது நம்பப்படுகின்றது.
முதல் தரமான மரகதம் கொலம்பியாவில் கிடைக்கின்றது, அங்கு கிடைக்கும் கற்களில் குரோமியம் அதிகமாக காணப்படுவதனால், தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறத்தில் உள்ளதாகவும் இது இருக்கின்றது.
மேலும் பிரேசில், எகிப்து, இந்தியா போன்ற நாடுகளிலும் பச்சை மரகதம் கிடைகின்றது, எனினும் தரத்தில் அவை உயர்வானதாக இருப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது.
பச்சை மரகதம்
பெரில் (Beryl) வகையை சேர்ந்த ஒரு கணிமமே பச்சை மரகதம் என அழைக்கப்படுகின்றது, இது பெல்லீயம், அலுமினியம், சிலிகேட் போன்ற மூலப்பொருட்களால் ஆனது.
இதில் சிக்கான், அலுமினியம், மக்னீசியம், குரோமியம் போன்ற ரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன.
பூமியில் இருந்து வெட்டி எடுக்கும்போது, இது மங்கலான கல்லாகவே காணப்படும், வனேடியம் (Vanadium) என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகின்றது.
மற்ற நவரத்தினங்களுடன் ஒப்பிடும்போது, பச்சை மரகதத்திற்கு அடர்த்தி தன்மை குறைவு, இந்த கற்கள் மென்மையானதோடு, எளிதில் நொறுங்கும் தன்மையானது.
பளபளப்பு ஏற்றப்பட்டு அழகுபடுத்தப்படும்போது தரமானதாகின்றது.
COMMENTS