தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.
எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு 'எஞ்சுபொருட்கிளவி' எனபதாகும். பொருள் எஞ்சிய, அதாவது, சொல்லாமற் குறைபட்ட, பொருளைக் குறிக்கும் சொல் என்பது இதன் விளக்கம். இதனைத் தொல்காப்பியம் பத்து வகையாகப் பகுத்துக் காட்டுகிறது.
எச்சங்கள் இருவகைப்படும்
பெயரெச்சம் என்றால் என்ன?
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
எடுத்துக்காட்டு - படித்த பையன் எனும் சொற்றொடரில் படித்த எனும் சொல் முற்றுப் பெறவில்லை. பையன் என்ற பெயர்ச் சொல்லைச் சேர்த்தால் படித்த பையன் என்று முற்றுப் பெறுகிறது. ஆதலின் படித்த என்பது பெயரெச்சம். (படித்த என்ற சொல்லோடு, பையன் எனும் பெயர் எஞ்சியுள்ளது.
வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம்
வினையெச்சம் என்றால் என்ன?
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
எடுத்துக்காட்டு - படித்து வந்தான். இதில் படித்து என்று சொல் முற்றுப் பெறவில்லை. வந்தான் என்றொரு வினைச் சொல்லைச் சேர்த்தால் அது முற்றுப் பெறும். படித்து என்ற சொல்லுடன் வந்தான் எனும் வினை எஞ்சியுள்ளது. ஆதலின் படித்து வினை எஞ்சிநின்ற சொல் அதாவது வினையெச்சம் எனப்படும்.

- பெயரெச்சம்
- வினையெச்சம்

COMMENTS